தலைப்பு செய்திகள்
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் சீட்டு குலுக்கிப் போட்டு கவுன்சிலர் தேர்வு.
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 10-வது வார்டில் கவுன்சிலர் சீட்டுக் குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இன்று வாக்கு எண்ணும் பணி காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டு உறுப்பினர் பதவிகளில் ஏற்கனவே 12வது வார்டு கவுன்சிலராக வெங்கடேசன் போட்டியின்றி தேர்வானார். இந்த நிலையில் இன்று மிச்சமுள்ள 14 வார்டு கவுன்சிலர்கள் பதவிகளுக்கு வாக்கு எண்ணிக்கை டான் பாஸ்கோ தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் இரண்டு அ.தி.மு.க கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். 12 இடங்களை திமுகவினர் கைப்பற்றினர். இதனையடுத்து ஊத்துக்கோட்டை பேரூராட்சி தி.மு.க வசமானது. 10-வது வார்டு கவுன்சிலர் ஆப்தாப் பேகம் 10 வது வார்டின் சுயேச்சை வேட்பாளர் சாந்தியுடன் 154 வாக்குகள் பெற்று சமநிலை அடைந்தனர். பின்னர் தேர்தல் நடத்தும் அலுவலர் மாலா அவர்களால் சீட்டு குலுக்கி போட்டு குலுக்கல் முறையில் சீட்டுக் குலுக்கிப் போட்டு வெற்றியாளரை தேர்வு செய்ய முடிவு செய்தனர். இதனையடுத்து குலுக்கல் முறையில் திமுக வேட்பாளர் ஆப்தாப் பேகம் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.