BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சைக்கிள் பேரணி, ஊர்வலங்கள் நடத்த அனுமதி இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள்,  கட்சியினர் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பிரசாரம் செய்யலாம் மற்றும்  சைக்கிள் பேரணி, ஊர்வலங்கள் நடத்த அனுமதி அளித்து மாநில தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டுள்ளது.
 இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் நேற்று  வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்  மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்  வாக்குப்பதிவு 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே இரவு 8 மணி  முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது பரப்புரை நேரம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளலாம்.

தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை  நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள்  ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு அளிக்கப்படுகிறது.  மாதிரி நடத்தை விதிகளில் கூறியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி உரிய  அலுவலரிடம் அனுமதி பெற்று மேற்கண்ட நிகழ்வுகளை மேற்கொள்ள உரிய அனுமதி வழங்க  மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் சென்னை  மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
 அரசியல் கட்சிகளின்  நட்சத்திரப் பேச்சாளர்கள் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களை மாவட்ட தேர்தல்  அலுவலருக்கு முன்கூட்டியே தெரிவித்து, அவரது ஒப்புதலை பெற்று பிரசாரம்  மேற்கொள்ளலாம். பரப்புரையின் போது கோவிட் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிப்பதை உறுதி  செய்ய அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
 இவ்வாறு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள்  மற்றும் 489 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்  வாக்குப்பதிவு 19ம் தேதி ஒரேகட்டமாக நடைபெறுகிறது.
* ஏற்கனவே இரவு 8 மணி  முதல் காலை 8 மணி வரை பிரசாரம் செய்யக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  தற்போது பிரசார நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மேற்கொள்ளலாம்.
* தேர்தல் பிரசாரத்திற்காக மேற்கொள்ளப்படும் சாலை  நிகழ்ச்சிகள், பாதயாத்திரை, சைக்கிள் பேரணி மற்றும் ஊர்வலங்கள் ஆகியவற்றிற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த தடைக்கு தளர்வு  அளிக்கப்படுகிறது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )