BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சென்னை மடிப்பாக்கத்தில் கொல்லப்பட்ட திமுக வட்டச்செயலாளர் செல்வத்தின் மனைவி கவுன்சிலர் தேர்தலில் வெற்றி.

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலில், மடிப்பாக்கத்தில் கொல்லப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவில் 188வது வட்டச் செயலாளராக பொறுப்பில் இருந்தவர் மடிப்பாக்கம் செல்வம். இவர் கடந்த 1-ம்தேதி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நிலையில் செல்வம் கொல்லப்பட்டது தமிகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழில் போட்டிதான் இதற்கு காரணம் என்று கூறப்பட்ட நிலையில், செல்வத்தின் கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் செல்வத்தின் மனைவி சமீனா செல்வம், திமுக வேட்பாளராக 188வது வார்டு கவுன்சிலர் பொறுப்புக்கு நிறுத்தப்பட்டார்.

இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சமீனா செல்வம், 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் சமீனா செல்வம், 2,975 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )