தலைப்பு செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் அருள்ஜோதி காரில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பாமகவினர் புகார்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் அருள்ஜோதி காரில் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக பாமகவினர் புகார் கொடுத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த நிலையில், செங்கம் பேரூராட்சியில் போட்டியிட்ட பாமக பெண் வேட்பாளர் அருள்ஜோதியை சிலர் காரில் வலுக்கட்டாயமாக ஏற்றி செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அங்கு வாக்கு எண்ணிக்கைநடந்து வரும் நிலையில் பெண் வேட்பாளரை மர்ம நபர்கள் வலுக்கட்டாயமாக காருக்குள் தள்ளி ஏற்றி சென்றதாக பாமகவினர் புகார் கொடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள பாமகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பதட்டம் நிலவி வருகிறது.