தலைப்பு செய்திகள்
இந்திரா காந்தி தேசிய கலை மையம் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் இந்திய தொல்லியல் துறை இணைந்து 75 ஆவது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் தஞ்சாவூர் உற்சவம் இயல் இசை நாடக முப்பெரும் விழா தொடங்கப்பட்டது.
3 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் வேத பாராயணம்,தேவார இசை மற்றும் கருத்தாளர்கள் தலைமையில் பயிற்சி பட்டறை, கவியரங்கம், ஹரிகதா, பரதநாட்டியம் நாம சங்கீர்த்தனம், கிராமிய நடனம், தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
முதல் நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் பரத நாட்டியக் கலையில் முதல்முறையாக முனைவர் பத்மா சுப்பிரமணியம் குழுவினரின் சங்கம் முதல் சதிர் வரை நாட்டிய நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது இதில்பிரபல இசைக் கலைஞர்கள் நர்த்தகி நடராஜ், முனைவர் பிரமிளா குருமூர்த்தி, மும்பை குரு கல்யாணசுந்தரம், லால்குடி கிருஷ்ணன், செல்வி மஹதி கண்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு இசையை கண்டு ரசித்தனர்
CATEGORIES தஞ்சாவூர்