தலைப்பு செய்திகள்
சென்னை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில், மேயர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் 100 வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டன. அத்துடன், சென்னை மேயர் பதவி பட்டியலினத்தைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த போட்டியில் திமுகவைச் சேர்ந்த 2 பெண்கள் உள்ளனர்.
குறிப்பாக, ஆலந்தூர் மண்டலத்தில் 159வது வார்டில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் அமுதபிரியா செல்வராஜ், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 70வது வார்டில் வென்ற ஸ்ரீதரணி ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. இதில், அமுதபிரியா செல்வராஜ், அமைச்சர் மா.சுப்பிரமணியத்தின் ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியான கொளத்தூரில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ள ஸ்ரீதரணிக்கும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், வரும் மார்ச் 4ஆம் தேதி மறைமுகமாக நடைபெறவுள்ள மேயர் தேர்வில் இதற்கான விடை கிடைத்து விடும்.