தலைப்பு செய்திகள்
5 ஓட்டால் பெண் வேட்பாளர் தற்கொலை முயற்சி !
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் தேர்தலில் போட்டியிட்ட அமமுக கட்சி வேட்பாளர் ராமஜெயம் தேர்தலில் தோல்வியுற்றால் தற்கொலை முயற்சியை மேற்கொண்டார்.
நேற்று தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராமஜெயம் வெறும் ஐந்து ஓட்டுகள் பெற்று படுதோல்வி அடைந்தார்.
மிகவும் குறைவான ஓட்டுகளைப் பெற்று தோல்வி அடைந்ததால் அந்தப் பெண் வேட்பாளர் மனமுடைந்து போனார். இதனால் அவர் எறும்பு பொடி சாப்பிட்டு தற்கொலை மேற்கொண்டார்.
இப்பொழுது அவர் மருத்துவமனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இவருக்கு உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
CATEGORIES தூத்துக்குடி