தலைப்பு செய்திகள்
பாஜக கூட்டணி இல்லாமல் கோவையில் அதிமுக இழந்த வார்டுகள் எத்தனை தெரியுமா?
தேர்தலில் கணக்குகள் மிக முக்கியம்… அந்த வகையில், நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட்ட பாஜகவும், அதிமுகவும் அக்கட்சிகள் பலமாக உள்ள கோவையில் படுதோல்வியை சந்தித்துள்ளன. கோவை மாநகராட்சியின் பல வார்டுகளில் அதிமுக-பாஜக ஓட்டுகளை சேர்த்தால், அங்கு வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிகம் வருகிறது. அப்படி, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விபரங்களின் அடிப்படையில் புள்ளி விபரத்தை எடுத்து பார்க்கும் போது , தனித்து போட்டியிட்டதால் அதிமுக 15 வார்டுகளை இழந்திருக்கிறது. இதோ அந்த வார்டுகளின் விபரமும், அங்கு வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விபரத்தை பட்டியலிடுகிறோம்.
கோவை மாநகராட்சி:
வார்டு எண் -6
வெற்றி: திமுக-3549
அதிமுக-2887
பாஜக-1337
வார்டு எண்-12
வெற்றி : மார்க்சிஸ்ட்-1915
அதிமுக-1568
பாஜக-1040
வார்டு எண்-13
வெற்றி: மார்க்சிஸ்ட் -2506
அதிமுக-2055
பாஜக-454
வார்டு எண் -14
வெற்றி: மதிமுக-1678
அதிமுக-724
பாஜக-737
வார்டு எண்-15
வெற்றி: காங்கிரஸ் -3452
அதிமுக-2629
பாஜக-1061
வார்டு எண் -24
வெற்றி-மார்க்சிஸ்ட் -3054
அதிமுக-2480
பாஜக-716
வார்டு எண் -28
வெற்றி: மார்க்சிஸ்ட் -4514
அதிமுக-2913
பாஜக-2372
வார்டு எண் -53
வெற்றி: இந்திய கம்யூனிஸ்ட் -3453
அதிமுக-3206
பாஜக – 1774
வார்டு எண் -69
வெற்றி: காங்கிரஸ் -3669
அதிமுக-2039
பாஜக-1990
வார்டு எண்-71
வெற்றி: காங்கிரஸ்-1465
அதிமுக-1309
பாஜக-1275
வார்டு எண் -72
வெற்றி: திமுக-4458
அதிமுக-3725
பாஜக-674
வார்டு எண்-73
வெற்றி: திமுக-4836
அதிமுக-3744
பாஜக-1399
வார்டு எண்-88
வெற்றி: திமுக- 3756
அதிமுக-3395
பாஜக-563
வார்டு எண் -89
வெற்றி: காங்கிரஸ் -4076
அதிமுக-3408
பாஜக-1048
வார்டு எண்- 91
வெற்றி: திமுக- 4306
அதிமுக-3823
பாஜக-562
இந்த 15 வார்டுகளில் அதிமுக-பாஜக கூட்டணி இருந்திருந்தால், அந்த கட்சியின் வேட்பாளர்கள் வெற்றி பெற வாய்ப்பிருந்திருக்கும் என்பதை அவர்கள் பெற்றுள்ள வாக்குகள் மூலம் அறிய முடிகிறது.