தலைப்பு செய்திகள்
கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பேரூராட்சி 5 வாக்குகள் பெற்றதையடுத்து மனமுடைந்து தற்கொலை முயற்சி மருத்துவமனையில் அனுமதி.
கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் 5 வாக்குகள் பெற்றதையடுத்து மனமுடைந்து தற்கொலை முயற்சி மருத்துவமனையில் அனுமதி.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விளாத்திகுளம் தேர்வுநிலை பேரூராட்சி 8வது வார்டில் போட்டியிட்ட அமமுக வேட்பாளர் ராமஜெயம் தான் போட்டியிட்ட வார்டில் அதிகப்படியான வாக்குகள் பெறுவார் என்று எதிர்பார்த்திருந்தார் அவரது வார்டில் 5 வாக்குகள் பெற்றதை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதனால் மனமுடைந்து இருந்த ராமஜெயம் வீட்டிற்கு வந்து யாரிடமும் பேசாமல் இருந்தது வந்ததாக தெரிகிறது இதனால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சிக்கு மூன்றாவதாகவும் தெரியவந்தது இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை உடனடியாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.