தலைப்பு செய்திகள்
மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர் திமுகவின் சிறந்த ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது.
மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர் திமுகவின் சிறந்த ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது-குமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளினால் ஏற்பட்ட இழப்புகள் கூட இரண்டாம் கட்ட தேர்தலில் தேர்தலில் சீர் செய்ய முடியும் அப்படி சரி செய்து அனைத்து உள்ளாட்சிகளையும் கைப்பற்றி நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு 5 ஆண்டுகள் தருவோம் என நாகர்கோவிலில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் திமுக விற்கு அமோக வெற்றி பெற்றுக்கொடுத்துள்ளது,இதன் மூலம் நாகர்கோவில் முதல் மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.
மேலும் 3 நகராட்சி,35க்கும் மேற்பட்ட பேரூராட்சி களை திமுக தன் கைவசம் கொண்டுவந்துள்ளது, இந்நிலையில் இன்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் நாகர்கோவிலில் திமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் சந்தித்து வாழ்த்து பெற்றனர்,பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்”
மகத்தான வெற்றியை மக்கள் தந்துள்ளனர் திமுகவின் சிறந்த ஆட்சிக்கு அங்கீகாரம் வழங்கும் விதமாக இந்த வெற்றி அமைந்துள்ளது,குமரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் கூட்டணிக்குள் ஏற்பட்ட பிரச்சினைகளினால் ஏற்பட்ட இழப்புகள் கூட இரண்டாம் கட்ட தேர்தலில் தேர்தலில் சீர் செய்ய முடியும் அப்படி சரி செய்து அனைத்து உள்ளாட்சிகளையும் கைப்பற்றி நல்ல நிர்வாகத்தை மக்களுக்கு 5 ஆண்டுகள் தருவோம் என நாகர்கோவிலில் தமிழக தொழில் நுட்பத்துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் தெரிவித்தார்,இதில் முன்னாள் அமைச்சரும் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான சுரேஷ்ராஜன,முன்னாள் எம்எல்ஏ.ஆஸ்டின் மற்றும் திமுகவினர் பலர் உடன் இருந்தனர்.