BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெற்றிபெற்ற நகர்புற வார்டு உறுப்பினர்களுக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பெரும்பாலான இடங்களை திமுக மற்றும் கூட்டணி கட்சி கைப்பற்றியது.

இதனையடுத்து வெற்றிபெற்ற வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும் நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம் முருகன் தலைமையில் தரங்கம்பாடி மயிலாடுதுறை குத்தாலம் மணல்மேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இதில் மயிலாடுதுறை மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சிவ.வீ.மெய்யநாதன் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். தரங்கம்பாடி பேரூராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 16 திமுக வேட்பாளர்கள் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

தொடர்ந்து மயிலாடுதுறை கண்ணார தெருவில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நகராட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 24 வேட்பாளர்கள் அமைச்சர் மெய்யநாதனை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

தொடர்ந்து வெற்றி பெற்ற வேட்பாளர்களை வாழ்த்தி பேசிய அமைச்சர் மெய்யநாதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழகம் முழுவதும் திமுகவினர் 60 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளதாக கூறினார். மேலும் பிரதமர் மோடி வாக்களிக்காத மாநிலங்களை புறக்கணிப்பதாகவும், பிரதமராக பொறுப்பு வகித்து இருந்தாலும் அவரது வாக்கு வங்கி உயராமல் இருக்கிறது என்றும் தெரிவித்தார். ஏழை எளியோரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காக தன்னை ஒப்படைத்த முதலமைச்சருக்கு கிடைத்த வெற்றியாக கருதுவதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்ச்சியகலில் பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர்கள் எம்.அப்துல்மாலிக், பி.எம்.அன்பழகன், சசிகுமார், பிரபாகரன், ரவிக்குமார், இமயநாதன், இளையபெருமாள், மங்கை சங்கர், முருகப்பா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி அமைப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், குத்தாலம் ஒன்றிய பெருந்தலைவர் மகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் க.அன்பழகன் எம்.எம்.சித்திக், ஜெகவீரபாண்டியன், அரசு வழக்கறிஞர்கள் இராமசேயோன், சிவதாஸ், அருள்தாஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழக மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )