BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

திருச்சிக்கு ரயிலில் வந்த பயணியிடம்
3கோடி மதிப்பு நகைகளை பறிமுதல்.

திருச்சி ரெயில் நிலையத்தில்
ரெயில்வே பாதுகாப்பு படை உதவி ஆணையர் சின்னத்துரை மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் தலைமையில்
ரெயில்களில் வரும் பயணிகள் உடைமைகள், சந்தேகத்திற்குரிய நபர்களை சோதனை செய்வது வழக்கம் அதன் படி நேற்று இரவு காரைக்காலில் இருந்து எர்ணாகுளம் செல்லும் எக்ஸ்பிரஸ் திருச்சி ரெயில் நிலையத்தில் வந்தது. ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரெயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக பெரிய பைகளில் பொருட்கள் சென்று சென்ற இரண்டு நபர்களை பிடித்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்ட போது அதில் 6கிலோ வளையல், நெக்லஸ், ஆரம், நெத்திச்சூடி உள்ளிட்ட ஆபரண நகைகள் கொண்டு செல்வது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில்
கொல்கத்தாவை சேர்ந்த 1 நபர் மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபர் என்பது தெரியவந்தது.

 


படுகொலை செய்யப்பட்ட நகைகள் மதிப்பு
ரூ.3கோடி ஆகும். அதற்குரிய ரசீதோ ஆவணங்களோ ஏதும் இல்லாததால் உடனடியாக காவல்துறையினர்
இதுதொடர்பாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் திருச்சி மாநில வரி அலுவலர் செல்வம், துணை மாநில வரி அலுவலர் சுந்தர்ராஜன் ஆகியோர் ரயில் நிலையத்துக்குச் சென்று ஆய்வு செய்தனர்.

 


எவ்வித ஆவணங்களும் இல்லாததால் அதற்காக ரூ.17 லட்சம் அபராதம் விதித்தனர். இது தொடர்பாக அந்த நபர்களிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்த அபராத தொகையை கட்டினால் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் விடுவிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
தங்கநகைகள் எவ்வித ஆவணமும்ன்றி கொண்டு செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )