தலைப்பு செய்திகள்
காட்டுஎருமை தாக்கியதால் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்த பெண் படுகாயம்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று தனியார் காபி தோட்டத்தில் வேலை செய்து வந்த பெண்ணை காட்டுஎருமை தாக்கியது.ஏற்காடு கரடியூர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்பாயி.வயது 50, கணவரின் பெயர் சந்திரன்.கருப்பாயி ஏற்காடு கரடியூரில் உள்ள தனியார் காபி தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்.
இன்று காலை வேலை செய்து கொண்டிருந்த போது அத்தோட்டத்தில் இருந்த காட்டு எருமை தாக்கியுள்ளது.இதனை அறிந்த பக்கத்தில் வேலை செய்துகொண்டு இருந்தவர்கள், கருப்பாயியை சிகிச்சைகாக ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.பின்னர் மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.மேலும் கருப்பாயிக்கு காட்டுஎருமை தாக்கியதில் கையில் லேசான அடியுடன் உயிர் தப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
CATEGORIES சேலம்