BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

ஆம்பூரில் தோல் மற்றும் தோல் கழிவு பொருட்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தோல் கழிவு பொருட்கள் எரிந்து நாசம்.

2 மணி நேரம் போராடி தீயணைப்புத் துறையினர்.தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் எம்.வி. சாமி நகர் பகுதியில் குடியிருப்புகளுக்கு மத்தியில் முட்புதர் நிறைந்த காலி இடங்களில் ரியாஸ்,மோகன்,முருகன் ,கலீல் சுபான், ஆகியோருக்கு சொந்தமாக தனித்தனியாக 5 க்கும் மேற்பட்ட தோல் மற்றும் தோல் பொருட்கள் கிடங்கு நடத்தி வருகின்றனர். ஆம்பூர் சுற்றியுள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து பிரிக்கப்படும் தோல் கழிவுகளை இந்த கிடங்குக்கு கொண்டு வரப்பட்டு அதனை சுற்றியுள்ள தொழிற்சாலைகள் மற்றும் செங்கல் சூளைக்கு எரியூட்டுவதற்காக அனுப்பி வைக்கின்றனர் .

இதில் 30க்கும் மேற்பட்ட கூலித் தொழிலாளர்கள் வேலை செய்து வந்துள்ளனர் இந்த நிலையில் இன்று பிற்பகல் வேலை முடித்து தொழிலாளர்கள் கிடங்கை பூட்டி விட்டு சென்ற சில மணி நேரத்தில் கிடங்கில் இருந்து கரும்புகை வந்துள்ளது அதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கிடங்கில் ஏற்பட்ட தீயை குடங்களில் தண்ணீர் எடுத்துச் சென்று தீயை அணைக்க முயற்சித்தனர்.

ஆனால் தீ மளமளவென கிடங்கு முழுவதும் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஆம்பூர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது சுற்றியுள்ள 5க்கும் மேற்பட்ட தோல் கிடங்கில் தீ பரவியதால் தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொதுமக்கள் அருகில் நெருங்க முடியாமல் திணறினர் சுற்றியுள்ள பொதுமக்களை காவல்துறையினர் வெளியேற்றினர் பின்னர் ஆம்பூர் வாணியம்பாடி , பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்கள் மூலமும், தனியார் தண்ணீர் டேங்க் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் பொது மக்கள் உதவியுடன் சுமார் இரண்டு மணி நேரமாக போராடி தீயை அனைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இருப்பினும் கிடங்கில் இருந்த அனைத்து தோல் மற்றும் தோல் பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான தோல் கழிவு பொருட்கள் எரிந்து நாசமானது மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த மரங்கள் எரிந்து சேதமானது
சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் மற்றும் தீயனைப்பு துறையினர் தொடர்ந்து தீ விபத்து மின் கசிவினால் ஏற்பட்டதா? அல்லது சமூக விரோதிகளின் செயல்களால் ஏற்பட்டதா என? தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தோல் கழிவு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில் தொழிலாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )