BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி திமுக வேட்பாளர் நதியா செழியன் பொதுமக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை கூடிய விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதிக்குட்பட்ட அரசிராமணி பேரூராட்சி 2-வது வார்டில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நதியா செழியன் பொதுமக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை கூடிய விரைவில் நிறைவேற்றித் தருவதாக உறுதியளித்துள்ளார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (பிப்.22) நடைபெற்றது. இந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல்களை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், சேலம் மாவட்டம் சங்ககிரி தொகுதிக்கு உட்பட்ட அரசிராமணி பேரூராட்சி 2-வது வார்டில் பட்டக்காரனூரைச் சேர்ந்த திமுக வேட்பாளர் நதியா செழியனும், காட்டக்கவுண்டனூரைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் அன்புச்செல்வி (தேவராஜ்), ஆகிய இருவரும் போட்டியிட்டனர். இந்நிலையில், இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சங்ககிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக சார்பில் போட்டியிட்ட நதியா செழியன் 50 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து, அக்கட்சி தொண்டர்களுக்கு கிடா விருந்து வைத்து உற்சாகத்துடன் கொண்டாடினார். இதனைத் தொடர்ந்து வாக்களித்த பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று நன்றி தெரிவித்து வருகிறார் திமுக கவுன்சிலர் நதியா.

மேலும், செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் களத்தில் பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் கூடிய விரைவில் நிறைவேற்றித் தரப்படும். குடிநீர், தார்சாலை, தெருவிளக்கு, முதியோர் உதவித் தொகை, பொதுக் கழிப்பறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்னதாக இருந்த அதிமுக கவுன்சிலர் கடந்த 20 ஆண்டுகளாக எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டிய அப்பகுதி மக்கள், தற்போதைய திமுக கவுன்சிலர் நதியா செழியன் இக்கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பர் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )