தலைப்பு செய்திகள்
உக்ரைன் வாழ் இந்தியர்கள்!! பாதுகாப்பாக இருங்கள்.
உக்ரைனில் நிலைமை சீராக இல்லை. இருப்பினும், அங்கு வசிக்கும் இந்தியர்கள் பதற்றப்படாமல் எங்கு வசிக்கிறீர்களோ அங்கு அமைதி காக்க வேண்டும். உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வேண்டுகோள்.
உக்ரைனின் தற்போதைய நிலை நிச்சயமற்றதாக உள்ளது. உக்ரைனில் நிலமை சீராக இல்லை. அங்கு வசிக்கும் இந்தியர்கள் பதற்றப்படாமல் எங்கு வசிக்கிறீர்களோ அங்கு அமைதி காக்க வேண்டும் என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைன் கியூவில் உள்ள மாணவர்கள், மருத்துவர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் வீடுகள், தங்கும் விடுதிகள் அல்லது போக்குவரத்தில் எங்கிருந்தாலும் அந்தந்த நகரங்களிலேயே அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள் என உக்ரைனின் இந்திய தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும், உதவிகள் தேவைப்படும் இந்தியர்கள் உக்ரைனில் உள்ள இந்திய தூதரகத்தை +380 997300428, +380997300483 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.