தலைப்பு செய்திகள்
பெரியகுளத்தில் பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கி முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 74 வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய ஒபிஎஸ் சகோதரர்.
தேனி மாவட்டம் பெரியகுளத்தில்
தமிழக முன்னாள் முதல்வரும் அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் உடன் பிறந்த சகோதரரும் பெரியகுளம் நகர் மன்ற உறுப்பினருமான ஓ.சண்முகசுந்தரம் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்கள் 74 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெரியகுளத்தில் உள்ள பெருமாள் கோவில்,ஸ்ரீவரசித்தி விநாயகர் கோவில், வீரகாளியம்மன் கோவில் உள்ளிட்ட கோவிலுக்கு சென்று சிறப்பு பூஜை நடத்தி சாமி தரிசனம் செய்தார்.
மேலும் பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் என 500 க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம், இனிப்பு மற்றும் பிரியாணி வழங்கி பிறந்தநாள் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர். உடன் பெரியகுளம் அஇஅதிமுக நகர செயலாளர் என்.வி.ராதா, நகர துணை செயலாளர் சமது, கூட்டுறவு சங்க தலைவர் அன்பு, விடிஎஸ். ராஜவேலு, ராஜகோபால், ராஜேந்திரன், முருகன், ராஜாங்கம், ஆசிக், கிட்டு ரங்கராஜ் மற்றும் நகர ஒன்றிய கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.