தலைப்பு செய்திகள்
ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு நீர்ப்பாசனத்திற்கு குழாய்கள் வழங்கும் திட்டம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு நீர் பாசனத்திற்கு தேவையான குழாய்கள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக மாவட்ட காலக்டர் தெரிவித்தார்
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவதுகு
2021 – 22 நிதியாண்டில் தாட்கோ மூலம் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு நீர்பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வழங்கும் திட்டம் மற்றும் புதிய மின்மோட்டார் வாங்கும் திட்டத்தின்கீழ் நிதியுதவி செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேற்கண்ட திட்டங்களில் விண்ணப்பிக்க http://application.tahdco.com என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவாக இருத்தல் வேண்டும். சிறுகுறு விவசாயியாக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.00 லட திற்குள் மிகாமல் இருத்தல் வேண்டும். வேளாண் துறையின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து அங்கரிக்கப்பட்டவகை பி.வி.சி குழாய்கள், மின்மோட்டார், டீசல் இஞ்சின், கொள்முதல் செய்ய வேண்டும். பி.வி.சி குழாய்கள் வாங்குவதற்கு 50 சதவீதம் அல்லது அதிக பட்சம் ரூ.15 ஆயிரம் மோட்டார் வாங்குவதற்கு 50 சதவீதமும் அல்லது அதிக பட்சம் ரூ.10,ஆயிரமும் வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு அலுவலக நாட்களில், அலுவலக நேரத்தில் மாவட்ட மேலாளர், தாட்கோ அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், 3-வது தளம், நாகர்கோவில் – 629001 என்ற முகவரியிலோ அல்லது மாவட்ட மேலாளர் கைபேசி எண்: 9445029468-க்கு தொடர்பு கொண்டு பயனடையுமாறு மாவட்ட கேட்டுக் கொள்ள படுகிறார்கள் இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.