BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தஞ்சையில் தேர்தல் தகராறில் ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் 4 பேர் மீது வழக்கு.

தஞ்சை பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்தவர் அருள்பாபு (வயது 41) ஆட்டோ டிரைவர்.

 

இவர் பள்ளியக்ரஹாரம் கடைதெருவில் ஆட்டோ முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தினேஷ், கார்த்திகேயன், உதயகுமார், கார்த்திக் ஆகிய 4 பேர் எதற்காக தேர்தலில் எதிர் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டாய் என கூறி அருள்பாபுவை சரமாரியாக தாக்கி ஆட்டோ கண்ணாடியை அடித்து நொறுக்கினர். மேலும் ஜாதி பெயரை கூறி திட்டி உள்ளனர்.
இது குறித்து அருள்பாபு கொடுத்த புகாரின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு கபிலன் வழக்குப்பதிவு செய்து தினேஷ் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )