தலைப்பு செய்திகள்
தஞ்சையில் லாரியில் மணல் கடத்தியவர் கைது.
தஞ்சை மாதாக்கோட்டை பிரிவு சாலை வழியாக லாரியில் மணல் கடத்தப்பட்டு செல்வதாக தமிழ்பல்கலை கழகம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் சப்&இன்ஸ்பெக்டர் அபிராமி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு உடனடியாக சென்றனர். போலீசாரை பார்த்ததும் 2 டிப்பர் லாரியில் வந்தவர்களில் ஒருவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் டிப்பர் லாரியில் இருந்த மற்றொருவரிடம் நடத்திய விசாரணையில் அவர் லால்குடி வந்தாரபாளையம் பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 37) என்பதும், 2 டிப்பர் லாரியில் மணல் கடத்தி வந்ததும், தப்பி ஓடியவர் சண்முகம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து 2 டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய சண்முகத்தை தேடி வருகின்றனர்.
CATEGORIES தஞ்சாவூர்