தலைப்பு செய்திகள்
உக்ரைனில் சிக்கிய 100க்கு மேற்பட்ட தமிழர்கள்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் க்கு இடையிலான எல்லை பிரச்சினை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. குறிப்பாக 2014 ஆம் ஆண்டு யாரும் எதிர்பாராத அளவில் ரசியா பல நடவடிக்கைகள் எடுத்தது. அதில் குறிப்பாக உக்ரைனுக்கு சொந்தமான கிரீமியா தீபகற்பத்தை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியது. அதன்பிறகு உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவ வீரர்களை குவித்தது.
எனவே இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் இரு நாடுகளுக்கு இடையே போர் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வந்தது.
இதற்கிடையே உக்ரேன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் ஆணையிட்டார். மேலும் அவர் கூறுகையில் உக்ரைன் நாட்டை கைப்பற்றுவது எங்களின் நோக்கம் அல்ல எங்களை நாங்கள் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கையாக ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்கும் என அவர் கூறியிருந்தார்.
மேலும் தற்பொழுது உக்ரேனின் தலைநகரத்தில் தமிழகத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் படிப்பிற்கும், வேலைக்காகவும் சென்றவர்கள் மாட்டி கொண்டதாக தகவல் வெளியாகி வருகிறது. குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த கொடைக்கானல் பகுதியில் உள்ள மாணவி மருத்துவப் படிப்பிற்காக உக்ரைன் சென்றுள்ளார் அவரும் உக்ரேன் தலைநகரத்தில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.