தலைப்பு செய்திகள்
ஏற்காடு மலைப்பாதையில் சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், இன்று இரவு 10மணியளவில் ஏற்காட்டிலிருந்து சேலத்திற்கு காப்பி லோடு ஏற்றி சென்ற சரக்கு வாகனம்(Tn38 aw 2236) கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.வண்டியில் ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்து சென்ற மஞ்சக்குட்டையை சேர்ந்த, இருதயராஜ் s/o ஆரோக்கியசாமி என்பவருக்கு கை துண்டாகி விட்டது.
மேலும் வண்டியின் ஓட்டுநர் மற்றும் ஒருவருக்கும் லேசான அடியும் ஏற்பட்டுள்ளது.வண்டியின் ஓட்டுனர் சாந்தகுமார் s/o சிரில், வண்டி திடீரென கட்டுப்பாட்டை இழந்துவிட்டது என கூறினார்.மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மூன்று பேரையும் 108யில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துசென்றனர். இதில் நேற்று இரவு 11.30. சிகிச்சை பலனின்றி ராஜ் என்பவர் இறந்து விட்டார் இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்றுக் கொண்டுள்ளது.
CATEGORIES சேலம்