BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்றத்தலைவர் சைலஜாவின் கணவரும் திமுக மாவட்ட பிரதிநிதியுமான சேகர் அரிவாளால் வெட்டி படுகொலை.

கோனேரிக்குப்பம் பகுதியிலேயேவெறிச்செயல்

மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

காஞ்சிபுரம் தாலுக்கா போலீசார் விசாரணை.

காஞ்சிபுரம் அடுத்த கோனேரிக்குப்பம் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தவர் சேகர் வயது 52, திமுக மாவட்ட பிரதிநிதியாகவும் இருந்து வருகிறார்.

இவரது மனைவி சைலஜா கோனேரிக்குப்பம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார்.

இந்நிலையில் சேகர் தனது இருசக்கர வாகனத்தில் கோனேரி குப்பத்தில் உள்ள தலையாரி தெரு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர் ஒருவர் அவரிடம் பேசுவது போல் நெருங்கி திடீரென அரிவாளால் வெட்டி சாய்த்து உள்ளார்.

இதில் படுகாயமடைந்த சேகரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன் காரணமாக கோனேரிக்குப்பம் பகுதியில் திடீர் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )