தலைப்பு செய்திகள்
உக்ரைனில் படித்து வரும் தனது மகன் மற்றும் அங்குள்ள 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்கும் படி பெற்றோர்கள் வேண்டுகோள்.
தேனியில் வசித்து வருபவர் சரவணன் இவருடைய மகன் உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.தேனியில் வசித்து வருபவர் சரவணன் இவருடைய மகன் உக்ரைன் நாட்டில் உள்ள ஒரு கல்லூரியில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார்.
சில தினங்களாக ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே ஒரு பதட்டம் நிலவி வந்த சூழலில் தனது மகன் இந்தியா திரும்பி வர விமான டிக்கெட் எடுத்த நிலையில் இன்று அதிகாலை சரவணனுக்கு அவரது மகன் ரோகித் குமார் அதிகாலையிலேயே தொலைபேசியில் அழைத்து உள்ளார். அழைப்பில் எங்கள் அருகாமையில் உள்ள இடங்களில் ரஷ்யா குண்டுகளை வீசி வருகின்றனர்.
அந்த அதிர்வினால் தாங்கள் எழுந்ததாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து அவரை பாதுகாப்பாக இருக்கும்படி பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர் இது தொடர்பாக ரோகித் தந்தை சரவணன் கூறியதாவது எனது மகன் உக்ரைனில் இருந்து பத்திரமாக மீட்கப்பட வேண்டும் இது மட்டுமல்லாது அங்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் உள்ளார்கள் அவர்களையும் பத்திரமாக மீட்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இது தொடர்பாக தேனி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவையும் அளித்தனர் மனுவின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட ஆட்சியர் க.வி.முரளிதரன் உறுதி அளித்தார்.