தலைப்பு செய்திகள்
முதலமைச்சர் ஸ்டாலினின் உங்களில் ஒருவன் நூலை வருகின்ற 28ஆம் தேதி ராகுல் காந்தி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வெளியிடுகிறார்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது 23 கால வாழ்க்கை வரலாறு பற்றி “உங்களில் ஒருவன் – பாகம் 1” என்ற நூல் எழுதி அதை வெளியிடவுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா வருகிற 28ஆம் தேதி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக ராகுல்காந்தி அகில இந்திய காங்கிரஸ் பங்கேற்று நூலை வெளியிடுகிறார்.
இவ்விழாவில் கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
மேலும், இவ்விழாவிற்கு முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஒ. பன்னீர்செல்வம், பாமக நிறுவனர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட அனைத்துக்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized