தலைப்பு செய்திகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணி மற்றும் பூச்சி தாக்குதலால் மா பூக்கள் பாதிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணி மற்றும் பூச்சி தாக்குதலால் மா பூக்கள் பாதிப்பு – மருந்து தெளிக்கும் பணி தீவிரம் – மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப்பட்டு சுவை மிகுந்த மாம்பழங்களை விவசாயிகள் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இந்தாண்டு வழக்கம்போல் மா சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர் தற்போது மா மரங்களில் மா பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்குகிறது இதனால் மகசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் பணி மூட்டம் மற்றும் பூச்சி தாக்குதல் காரணமாக ஆலப்பட்டி கங்கலேரி மூங்கில் புதூர் போன்ற பகுதிகளில் உள்ள மா மரங்களில் பூக்கள் கருகி வருகிறது இதனால் மகசூல் குறைந்து பெரிதும் பாதிக்கபடும் நிலை உள்ளது.
இதனால் விவசாயிகள் மா பூக்களை பாதுகாக்க மா மரங்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இது குறித்த தெரிவித்த மா விவசாயிகள் தொடர் மழையால் மா பூக்கள் அதிகளவில் பூத்து குலுங்கியது. அதை தொடர்ந்து கடும் பணி மற்றும் பூச்சி தாக்குதலால் தற்போது பூக்கள் கருக தொடங்குகிறது. இதை தவிர்க்கும் வகையில் மருந்து தெளித்து வருகிறோம் மருந்து விலை உயர்வு, ஆட்கள் கூலி அதிகரிப்பு போன்ற காரணங்களால் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளோம். மருந்துகள் தெளித்தாலும் பூக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மகசூல் குறைவும் என கவலையுடன் தெரிவித்தனர்.