தலைப்பு செய்திகள்
நாஞ்சிக்கோட்டையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு முன்னேற்பாடுகள் , பாதுகாப்புகள் குறித்து சுகபுத்ரா ஆய்வு செய்தார்.
நாஞ்சிக்கோட்டையில் நாளை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு, அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து உதவி ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் அருகே நாஞ்சிக்கோட்டையில் அமைந்துள்ள வீரமுனியாண்டவர் ஆலயத்தின் சிவராத்திரி விழாவை முன்னிட்டு, நாளை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 650க்கும் மேற்பட்ட காளைகள், 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்க உள்ளனர். மேலும் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தடுப்பூசி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை போட்டி நடைபெறுவதையொட்டி அங்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்புகள் குறித்து உதவி ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு செய்தார்.