BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

தூத்துக்குடி பட்டாசு தொழிற்சாலை விபத்து நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், துறையூர் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் கொப்பம்பட்டியைச் சேர்ந்த ராமர், பொய்யாதங்கவேல் தொட்டம்பட்டி, பசுவந்தனையைச் சேர்ந்த ஜெயராஜ், நாலாட்டின்புதூரைச் மாடமுத்து என்கிற கண்ணன் ஆகிய நான்கு நபர்கள் உயிரிழந்த துயரச் செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், இந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் மூன்று லட்சம், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )