தலைப்பு செய்திகள்
ஏற்காட்டில் அடிபட்ட நிலையில் சாலையில் விழுந்துகிடந்த காட்டுஎருமை.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், காட்டுஎருமை காலை குப்பனூர் செல்லும் வழியில் முனியப்பன் கோவில் அருகில் மலைமேல் இருந்து தவறி விழுந்ததில் இரண்டு கால்களும் முறிந்தது. மேலும் முன்னங்கால் பலத்த காயம் ஏற்பட்டதால் சாலையோரத்தில் வெகுநேரமாக அந்த இடத்திலேயே இருந்தது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாப்பிரெட்டிப்பட்டி வனத்துறை அதிகாரி பரசுராமன்.
வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் பாலாசந்திரன் .ஆகியோர் காட்டுஎருமைக்கு மயக்கமருந்து ஊசி செலுத்தி, முதலுதவி சிகிச்சை அளித்தனர்.மற்றும் கோடை காலம் என்பதால வனவிலங்குகள் இரவு மற்றும் பகல் நேரங்களிலும் சாதாரணமாக சாலையில் தண்ணீருக்காக சுற்றி திரிகின்றது.இதனால் வாகன ஓட்டிகளும் இரவு நேரங்களில் அச்சத்துடன் பயணிக்கின்றனர்.மேலும் இந்த காட்டுஎருமை காப்பாற்றப்படுமா என்று கேள்விக்குறியாக உள்ளது.
CATEGORIES சேலம்