தலைப்பு செய்திகள்
மடத்துக்குளம் பேரூராட்சி நான்காவது வார்டில் போட்டியிட்ட மணிமேகலை வெற்றி பெற வைத்த பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
மடத்துக்குளம் அ.லாரன்ஸ் செல் (9585386661) மடத்துக்குளம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மடத்துக்குளம் பேரூராட்சி நான்காவது வார்டில் போட்டியிட்ட மணிமேகலை நமச்சிவாயம் 334 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பின்னர் இதனை கொண்டாடும் விதத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வெற்றி வேட்பாளர் மணிமேகலை நமச்சிவாயம் அவர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு, மேளதாளங்கள் முழங்க, வெற்றி பெற்ற வீதி எங்கும் ஊர்வலமாகச் சென்று, பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
CATEGORIES திருப்பூர்