BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது .

சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் கழகங்களின் பெயரை பயன்படுத்தி பொதுமக்களிடம் பணம் பறிக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் குமரிமாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு-மேலும் தங்களின் கழகத்தின் பெயரை பயன்படுத்தி வசூலில் ஈடுப்பட்டு வரும் நபர்களிடம் பணம் கொடுத்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என வேண்டுகோள்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் இன்று நாகர்கோவிலில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் இணைந்து தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி வசூலிக்கும் போலி கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்,

பின்னர் பேசுகையில்” கொரோனா காலகட்டத்தில் கடந்த இரண்டு வருடங்களாக பொது மக்களுக்கு பல்வேறு வகையில் சேவையாற்றி வருவதாகவும், ஏழை எளியோருக்கு நலத்திட்டங்களை வழங்கி உதவி புரிந்து வருவதாகவும் தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகம் அனைத்து தரப்பு மக்களுக்கு உதவி செய்து வரும் நிலையில் தங்களின் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தங்கள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் சிலர் ஈடுபட்டு வருவதை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு புகார் அளித்துள்ளோம்,மேலும் தங்களின் அனைத்து இந்திய சட்ட உரிமைகள் கழகத்தின் பெயரை பயன்படுத்தி பணம் வசூலித்தால் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம்,காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.இதில் மாநிலத் தலைவர். சுப்ரீம்கோர்ட் சுப்பிரமணியன்,மாநில நிர்வாக செயலாளர்.டாக்டர். சுபஹான்,மாவட்ட செயலாளர்,சுந்தர் மாவட்ட துணைச் செயலாளர்.ஷேக்,மாவட்ட நிர்வாகக் குழு செயலாளர்.ரமேஷ், மாவட்ட இளைஞரணி ஒருங்கிணைப்பாளர். பைசல்,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர். அஸ்சிப்கான் என பலர் கலந்து கொண்டனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )