BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கிருஷ்ணகிரி  பாலேப்பள்ளி கிராமத்தில் நடைப்பெற்ற 12-ம் ஆண்டு எருது விடும் விழாவில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் இருந்து 400 காளைகள் பங்கேற்பு.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுத் தோறும் புகழ்பெற்ற எருது விடும் விழா பல தலைமுறையாக பல்வேறு கிராமங்களில் நடந்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி
அருகேயுள்ள பாலேப்பள்ளி கிராமத்தில் 12-ம் ஆண்டு எருது விடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


இந்த எருது விடும் விழாவில்
கிருஷ்ணகிரி, ஓசூர், வாணியம்பாடி, ஆலங்காயம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி,மற்றும் ஆந்திரா மாநிலம் குப்பம், போன்ற இடங்களில் இருந்து சுமார் 400 காளைகள் கொண்டுவரப்பட்டது.
‘தமிழக அரசின் ஜல்லிக்கட்டு விதிமுறைகள் படி காளைகள் ஒடும் இருபுறங்களும் தடுப்பு அரண்கள் அமைக்கப்பட்டு அதன் நடுவே
வாடி வாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக சீறிப் பாய்ந்து ஓடியது.


இதில குறைந்த நொடியில் 125 மீட்டர் தூரத்திற்கு ஒடி இலக்கை எட்டும் காளைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
இதன் முன்னதாக கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் காளைகளை பரிசோதனை செய்து போட்டியில் பங்கேற்க அனுமதி வழங்கினர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விதிமுறைகள் பின்பற்றி எருதுவிடும் விழா நடைப்பெற்றது,
இந்த விழாவில் கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ஒசூர், தருமபுரி ஆகிய இடங்களில் இருந்து ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டு உற்சாகமடைந்தனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )