BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், வெளியூர் வியாபாரிகள் நெல்லை விற்பதாக எழுந்த புகார்.

உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு தென்மண்டல எஸ்.பி தலைமையில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் அதிரடி சோதனை இது வரை 100 டன் நெல் பிடிபட்டதாக தென்மண்டல உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி பாஸ்கரன் பேட்டி.

 

தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லுக்கு உரிய நியாயமான விலை கிடைத்திட வேண்டும் என்பதற்காகவே முந்தய கலைஞர் ஆட்சி காலத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் துவக்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில்

வெளியூர் வியாபாரிகள் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களின் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் கூறிய புகாரையடுத்து

 

இன்று தஞ்சையில் தஞ்சை- புதுக்கோட்டை சாலை சோதனை சாவடிகளில்

தென்மண்டல உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி எம்.பாஸ்கரன் தலைமையிலான போலீசார் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரிகளை சோதனையிட்டனர்

இது குறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி எம்.பாஸ்கரன் கூறுகையில்

கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளின் நெல்லை மட்டுமே வாங்க வேண்டும்.

 

வியாபாரிகள் நெல்லை கொள்முதல் செய்வதாக எழுந்த புகாரையடுத்து உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி உத்தரவில் இன்று சோதனை செய்வதாகவும்

இதுவரை 100 டன் நெல் பிடிபட்டுள்ளது என்றவர்

தொடர்ந்து சோதனை செய்யப்படும் உரிய ஆவணங்கள் இல்லாமல் நெல்லை கொண்டு சென்றால் லாரியுடன் பறிமுதல் செய்வோம் என்று எச்சரித்தார்

இதே போல் தஞ்சை – திருச்சி சாலையில் புதுக்குடியிலும்

திருவாரூர் மற்றும் நாகையிலும் சோதனை நடைபெறுகிறது

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )