BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பூச்சி தாக்குதலால் அழிந்து வரும் மா விவசாயத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மா விவசாயிகளின் கூட்டமைப்பின் தலைவர் சவுந்திரராஜன், கிருஷ்ணகிரி அணை இடதுபுறக்கால்வாய் நீட்டிப்பு சங்கத்தின் தலைவர் சிவகுரு தலைமையிலான விவசாயிகள் பூச்சி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மா பூக்கள், இலைகளுடன், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரிடம் மனு அளித்தனர்.

அந்த மனுவில் 5 ஆண்டுகளாக மாசாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மழையின்மையால் மாமரங்கள் காய்ந்து போனது. குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளாக பூச்சி தாக்குதல் காரணமாக மா மகசூல் வெகுவாக பாதிக்கப்படுகிறது. மா சாகுபடியை பொறுத்தவரை பூச்சி தாக்குதல் பூக்களில் தொடங்கி காய்கள், பழங்களை பாதிக்கும் நிலை தான் இருந்தது. ஆனால், தற்போது பூக்களை தாக்கியுள்ள தத்து பூச்சிகளால், மா இலைகளும் பாதிக்கப்படுகிறது.

மா பருவக்காலம் தொடங்கும் போது விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள், பயிற்சி வழங்க வேண்டும் என ஏற்கனவே முத்தரப்பு கூட்டத்தில் விவசாயிகள் அறிவுறுத்தியும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால் எதிர்வரும் ஆண்டுகளில் மா விவசாயம் முற்றிலும் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தியும், மாங்காய்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )