தலைப்பு செய்திகள்
பிரிட்டன் விமானங்கள் தரையிறங்க, வான்வ்வெளியை பயன்படுத்த தடை விதித்தது ரஷியா.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் ராணுவ வாகனங்களை கைப்பற்றிய ரஷிய வீரர்கள், உக்ரைன் ராணுவ வீரர்களின் சீருடையை அணிந்து கைப்பற்றப்பட்ட வாகனங்களில் அதிவேகமாக கீவ் நகருக்குள் நுழைந்துள்ளனர்.
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
இன்று நடைபெற்ற சண்டையில் உக்ரைன் ராணுவ விமானம் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பிரிட்டனில் பதிவு செய்யப்பட்ட விமானங்கள் தரையிறங்கவோ அல்லது வான்வெளியைக் கடக்கவோ ரஷ்யா தடை விதித்துள்ளது.
CATEGORIES Uncategorized