தலைப்பு செய்திகள்
உக்ரைன் மீது ரஷ்ய முழு படையெடுப்பு. மனதை கலங்கவைக்கும் புகைப்படங்கள்.
ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவியதை அடுத்து தலைநகர் கீவுக்குள்ளும் படைகள் நுழையும் நிலையில் உள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்யப் படைகள் உக்ரைனுக்குள் ஊடுருவியதை அடுத்து தலைநகர் கீவுக்குள்ளும் படைகள் நுழையும் நிலையில் உள்ளன. இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா நேற்று முதல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உயிரிழப்பு அதிகமாகி வருகிறது. உலக நாடுகள் முழுவதும் இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் கோிக்கை வைத்துள்ளது.
உக்ரைன் மக்கள் பலர் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். ரஷ்யா படையெடுப்பால் குழந்தைகள் பலர் தங்களது உறவுகளை இழந்துள்ளனர்.
ரஷ்ய விமானம் ஒன்று சுட்டுவீழ்த்தப்பட்டு கட்டிடம் ஒன்றினுள் புகுந்ததாக கூறப்படுகிறது. தலைநகரின் சுற்றுப்புறப்பகுதியில் ரஷ்யப் படைகள் ஊடுருவியுள்ளன, அடுத்து தலைநகருக்குள்ளும் ஊடுருவும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
உக்ரைன் மீதான படையெடுத்துள்ள ரஷ்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வை எட்ட பலர் கோரிக்கை விடுகின்றனர்.
ரஷ்ய தாக்குதலால் தனது உடைமைகளை இழந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியமால் தவிக்கும் உக்ரைன் நாட்டை சேர்ந்த நபர்.
உக்ரைனில் பொதுமக்கள் பலர் தங்களது உடைமைகளை இழந்து அகதிகளை போல் சொந்த நாட்டில் திரிந்து வருகின்றனர்.
உக்ரைன் மீது குண்டுமழை பொழியும் ரஷ்யா
ஏடிஎம் வாசலில் நீண்ட தூத்திற்கு காத்திருக்கும் பொதுமக்கள்.