தலைப்பு செய்திகள்
திருச்சி அருகே வெடி வெடித்ததை தடுத்த போலீஸாரை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் கைது.
திரைப்பட நடிகர் அஜித் நடித்த திரைப்படம் லால்குடியில் உள்ள அன்பு சினிமா தியேட்டரில் நேற்று ஒளிபரப்பானது . இந்த படத்தினை காண அஜித் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து உற்சாகத்தின் வெளிப்படையாக சினிமா தியேட்டரில் முன்புறமுள்ள லால்குடி ரயில்வே மேம்பால அனுகு சாலையில் வெடி வெடித்து கொண்டாடினர்.
அப்போது அங்கிருந்த போலீசார் வெடி வெடித்த இளைஞர்களை எச்சரித்தும் மீண்டும் வெடி வெடித்து ஆரவாரம் செய்து போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த இளைஞர்களை கண்டித்த போது அந்த இரு இளைஞர்களும் போலீசார் சுரேஷ் என்பவரின் வலது கையினை கடித்து காயப்படுத்தினார்.
இதனால் காயம் அடைந்த போலீசார் சுரேஷ் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் . போலீசார் சுரேஷை கடித்த அஜித் ரசிகர் டால்மியாபுரத்தைச் சேர்ந்த அருண் குமார் மற்றும் கோபிநாத் ஆகிய இருவரையும் லால்குடி போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் முன் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவின் கீழ் முசிறி கிளைச் சிறையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.