தலைப்பு செய்திகள்
கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் 26 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரியில் 26ஆம் பட்டமளிப்பு விழா மற்றும் 28ஆம் கல்லூரி விழா கல்லூரி வளாகத்தினிலுள்ள ஆபிரகாம் அரங்கினில் வெகு விமர்சியாக நடைபெற்றது.
இவ்விழாவில் கொடைக்கானல் கிறித்துவக் கல்லூரி தாளாளர் மற்றும் முதல்வர் டாக்டர் சாம் ஆபிரகாம் அவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு வாழ்த்துக்களையும் அவர்கள் அடையவேண்டிய இலக்குகளையும் எடுத்துரைத்து தமிழ்தாய் வாழ்த்துடன் விழாவினை துவக்கி வைத்து கல்லூரி ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார், இவ்விழாவில் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் எம் கிருஷ்ணன் அவர்கள்(மத்திய பல்கலைக்கழகம் தமிழ்நாடு- திருவாரூர்) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், அவரது உரையில் நாம் உயர் கல்வித்துறையில் அடைய வேண்டிய இலக்குகள் குறித்தும் குறித்தும், அவற்றை மேம்படுத்தும் விதங்கள் குறித்தும், இன்றைய மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியினை நன்முறையில் பயன்படுத்தி வாழ்வின் உயர்நிலையை அடைய வேண்டிய அவசியம் குறித்தும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மாணவர்களுக்கு அச்சாணியாக விளங்கும் கல்வி மேம்பட வேண்டிய நிலைகள் , இன்றைய மாணவர்களுக்கு தேவையான தொலைநோக்கு பார்வை குறித்தும் , போட்டித் திறன் ஆகியவற்றில் மாணவர்கள் அடைய வேண்டிய உயரங்கள் குறித்து மிகவும் எளிமையாகவும் திறம்படவும் எடுத்துரைத்து, கல்லூரியில் இறுதியாண்டு முடித்த மாணவர்களுக்கு பட்டங்களும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் கேடயங்களையும் வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் விஜய ரகுநாதன், இணை கல்வியாளர் டாக்டர் எபிதாமஸ், இணை முதன்மை கல்வியாளர் பிங்கி, கல்லூரியின் மேலாளர் திரு ரிச்சர்ட் மர்லின் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.