தலைப்பு செய்திகள்
மயிலாடுதுறை அருகே தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கபடி போட்டியை நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை அருகே தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிர் கபடி போட்டியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன் தொடங்கி வைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சங்கரன்பந்தல் கிராமத்தில் தென்னிந்திய அளவிலான ஆடவர் மற்றும் மகளிருக்கான மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றனர்.
தொடர்ந்து கபடி விளையாடும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வாழ்த்துக்களை தெரிவித்து போட்டியை தொடங்கி வைத்தார்.மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கபடி போட்டியில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். மேலும் பெங்களூரு, கேரளா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதில் ஜூனியர், சப் ஜூனியர் ஆகிய பிரிவுகளின் கீழ் நடைபெறும் இந்தப் போட்டியில் இறுதி போட்டியானது ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
நிகழ்ச்சியில் நாகை வடக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் மு.ஞானவேலன், மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவி, ஒன்றிய செயலாளர் எம்.அப்துல் மாலிக், ஒன்றியக்குழு பெருந்தலைவர் நந்தினி ஸ்ரீதர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.எம்.சித்திக், கே.எஸ்.எஸ்.கருணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் தேவிகா வேந்தன், விழா குழு ஒருங்கிணைப்பாளர்கள் இலுப்பூர் துறை, எரவாஞ்சேரி ராஜாராமன், சங்கரன்பந்தல் தங்கமணி, ஆசிக் ரஹ்மான், முகம்மது மாலிக், பி.எம்.விஜி, மணி, தமிழ்வாணன்- பாண்டியன் மற்றும் கிராம நிர்வாகிகள், பார்வையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.