BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

இரண்டாவது நாளாக குறைந்தது தங்கம் விலை.

நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 568 விலை குறைந்துள்ளது.

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை ஏற்ற இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக அதிரடியாக குறைந்துள்ளது.


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4738 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4809 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 71 குறைந்துள்ளது.


அதன்படி, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 38,472-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ. 568 குறைந்து ரூ.37,904-க்கு விற்பனையாகிறது.


ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4738 விற்பனை செய்யப்படுகின்றது.
தங்கத்தின் விலையானது குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையும் சற்று குறைந்து காணப்படுகின்றது.

நேற்று மாலை நிலவரப்படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 70.00-க்கு விற்பனையான நிலையில் இன்று 1.00 காசுகள் குறைந்து ரூ. 69.00-க்கு விற்பனை செய்யப்படுகின்றது.


நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 64 அதிகரித்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ. 568 விலை குறைந்துள்ளது.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )