BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரேனின் சிக்கித்தவிக்கும் நிலக்கோட்டை அருகே அம்மாபட்டியைச் சேர்ந்த மருத்துவக் கல்லுரி மாணவரை மீட்க்க கோரி பெற்றோர் கண்ணீர் மல்க வேண்டுகோல்.

ரஷ்யாவிற்கும் – உக்ரேனுக்கும் 3-வது நாளாக போர் நடந்து வரும் சூழலில் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள அம்மாபட்டியைச் சேர்ந்த கால்நடை மருத்துவரின் மகன் சிரில் போஸ்க்கோ உக்ரேனின் செர்னோபில் அருகேயுள் ஜெப்ரோசியா மருத்துவக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகின்றார்.

அவரை மீட்டுத்தரக் கோரி அவரது பெற்றோர்கள் மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் ஆனாலும் மூன்று நாட்களாக எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் மிகுந்த வேதனை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் நேற்று முதல் பல நேரங்களில் அவரை தொடர்புகொள்ள முடியாத சூழ்நிலை உள்ளதாகவும் இணையம் மற்றும் மின்சார செலவை அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும் இதனால் மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தல் உள்ளதாக மத்திய மாநில அரசுகள் மீட்டுத்தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்த நிலையில்

இதுகுறித்து உக்ரேனில் இருந்து மாணவர் சிரில் போஸ்க்கோ இன்று ஒரு விடியோ பெற்றோருக்கு அனுப்பியுள்ளது அவர்களை மேலும் கவலையடையசய்துள்ளது அதில் சிரில் போஸ்க்கோ கூறியதாவது இன்று முதல் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் மற்றும் இணைய சேவை முடங்கியுள்ளதாக நேற்றுமுதல் அடிக்கடி அபாய எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு வருவதாகவும் அடிக்கடி தங்கள் குடியிருப்பை சுற்றி வெடி சத்தம் கேட்பதாகவும் இதனால் இரண்டு நாட்களாக தூக்கமின்றி தரை தளத்தில் பதுங்கியிருப்பதாகவும் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக கூறியுள்ளார்.

எனவே உக்ரேனில் சிக்கி உள்ள சிரில் போஸ்க்கோ உட்பட 50- மாணவர்களை உடனடியாக மீட்க மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்களது பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )