தலைப்பு செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் 1லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு 1510 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து.
தஞ்சை மாவட்டத்தில் 1லட்சத்து 91 ஆயிரம் குழந்தைகளுக்கு 1510 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணி துவங்கி நடைபெறுகிறது.. தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தனர்.
தஞ்சை இராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தை வழங்கி தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரவிக்குமார் உள்ளிட்டவர்கள் துவக்கி வைத்தனர்.
இது குறித்து பேட்டி அளித்த தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
மாவட்டத்தில் 1515 முகாம்களில், 1லட்சத்து, 92 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது, நடமாடும் மையங்கள், மூலம் செங்கள்சூலை, கட்டிட வேலை நடைபெறும் இடங்கள், நரிக்குறவர்கள் குழந்தைகள் என சொட்டு மருந்து அளிக்கப்படுகிறது… இப்பணிகளில் 6178 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர், போலியோ இல்லாத மாவட்டம், மாநிலம் என உருவாக்குவதே இதன் நோக்கம் என்றார்.