தலைப்பு செய்திகள்
இலுப்பூர்-சங்கரன்பந்தலில் தென்னிந்திய அளவிலான ஆடவர்-மகளிருக்கான மாபெரும் கபாடி போட்டி.
இலுப்பூர்-சங்கரன்பந்தலில் தென்னிந்திய அளவிலான ஆடவர்-மகளிருக்கான மாபெரும் கபாடி போட்டி அதிமுக மாவட்ட செயலாளர் எஸ் பவுன்ராஜ் துவங்கி வைத்தார்.
தரங்கம்பாடி, பிப்-26, மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர்-சங்கரன்பந்தல் வீரமங்கை வேலுநாச்சியார் அரங்கத்தில் தென்னிந்திய ஆடவர்-மகளிருக்கான மாபெரும் மின்னொளி கபாடி போட்டி வீரமங்கை வேலுநாச்சியார் அரங்கத்தில் வெள்ளியன்று இரவு மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் பூம்புகார் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் துவக்கி வைத்தார். 3 நாட்கள் நடைப்பெறும் இப்போட்டிகளில் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த அணிகள் வெள்ளிக்கிழமை பங்கேற்றது.
இலுப்பூர்-சங்கரன்பந்தல் விளையாட்டு கழகம் சார்பில் நடத்தப்படும் போட்டியில் இந்திய அளவில் பிரபல நிறுவன அணிகளான துணை ராணுவ அணி, சென்னை ஐ.சி.எஃப், ரயில்வே அணி, சிட்டி போலீஸ் அணி, இந்திய வருமான வரி துறை அணி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபல அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ரப்பர் ஆடுகளத்தில் நடைபெறும் போட்டிகள் நாக்அவுட் மற்றும் லீக் சுற்று முறையில் நடைபெறுகிறது. போட்டியில் 60-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கிறது. 25 நடுவர்கள் பங்கேற்று போட்டிகளை நடத்துகின்றனர். முதல் நான்கு இடங்களை பிடிக்கும் ஆண்கள் அணி ரூ.1 லட்சம் பெண்கள் அணி ரூ.40 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை பரிசுதொகை வழங்கப்படுகிறது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் மாவட்ட அதிமுக அவைத் தலைவருமான பி.வி. பாரதி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான சக்தி, மயிலாடுதுறை ஒன்றிய செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராதாகிருஷ்ணன், செம்பை அதிமுக ஒன்றிய செயலாளர்கள் ஜனார்த்தனன், வி.ஜி. கண்ணன், பேரூராட்சி செயலாளர்கள் கிருஷ்ணசாமி, ரவி, மாவட்ட அதிமுக பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன், முன்னாள் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு அணி செயலாளர் நாடி-செல்வ முத்துக்குமரன் மற்றும் விழாக்குழு பொறுப்பாளர்கள் இராம.குமார், கருணாநிதி ராஜாராமன் தங்கமணி ஆசிக் ரஹ்மான், முகமது மாலிக், விஜி, மணி, தமிழ்வாணன், பாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். கேட்டுக்கொள்கிறோம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கலந்து கொண்டு கபடி போட்டியை கண்டுகளித்தனர்.
படவிளக்கம் ;- இலுப்பூர் சங்கரன்பந்தலில் நடைப்பெற்றுவரும் மாபெரும் தென்னிந்திய கபாடி இரண்டாம் நாள் நிகழ்ச்சியை மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் துவக்கி வைத்துபோது எடுத்த படம்.