BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பெண்களை கல்லூரியை தடுத்து நிறுத்தினார்.


கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பெண்களை கல்லூரியை தடுத்து நிறுத்தினார். இதனை கண்டித்து கர்நாடகாவில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை கலைக்க கோரி மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்று
ஏகத்துவ முஸ்லீம் ஜமாத் சார்பில் இப்ராகிம் பார்க் அருகில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.

 


கண்டன உரையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்றக் குழுத் தலைவருமான சிந்தனைச்செல்வன் மற்றும் ஏகத்துவ முஸ்லீம் ஜமாஅத்தின் மாநில துணை பொது செயலாளர் அல்தாபி ஆகியோர் வழங்கினர்.

கூட்டத்திற்கு முன்னதாக கர்நாடக பாஜக அரசை கண்டித்தும் கோஷமிட்டனர்.

தொடர்ந்து பொது கூட்டத்தில் இந்திய அரசியல் சாசனம் 25ன்படி இஸ்லாமியர்களுக்கு
வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை தொடர்ந்து பறிக்க நினைக்கும்
பாசிச பாஜக அரசை வன்மையாக கண்டிப்பது,
நடந்த முடிந்த தமிழக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் நாங்கள்
வெற்றி பெற்றால் மாட்டிறைச்சி உண்பதை தடை செய்வோம் எனவும்
ஹிஜாப் அணிவதை தடை செய்வோம் எனவும் மதவெறி பேச்சை
வெளிப்படுத்திய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை வன்மையாக கண்டிப்பது,
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிய
இஸ்லாமியர்களை தேச விரோதிகளாக சித்தரித்து அவதூறு பரப்பி மதக்
கலவரத்தை தூண்ட நினைக்கும் பாஜகவை சேர்ந்த எச்.ராஜா வை
உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்,

தண்டனை காலம் முடிந்தும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக
சிறையில் வாழும் சிறைவாசிகளை நல்லெண்ண அடிப்படையில்
விடுதலை செய்யும்படி தமிழக அரசுக்கு இப்பொதுக்கூட்டம் மூலம்
கோரிக்கை வைக்கப்படுகிறது.
இந்திய இறையாண்மையைக் காக்கும் வகையில் இந்திய அரசியல்
சாசனத்தின் அடிப்படையில் தமிழக மக்களை ஒன்றிணைத்து மத
நல்லிணக்கத்தோடு நல்லாட்சி புரிந்து வரும் தமிழ்நாடு முதல்வர்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அருள்,
மாவட்ட நிர்வாகி சந்தனமொழி, பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி செயலாளர் தமிழாதன், இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில செயலாளர் அறியமங்கலம் பெரோஸ்கான், முசிறி கலை, மணப்பாறை மதனகோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )