தலைப்பு செய்திகள்
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் புளியமரத்தில் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.
ஸ்ரீபெரும்புதூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர்கள் புளியமரத்தில் மோதிய விபத்தில் இரண்டு வாலிபர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு
விபத்தை பார்க்க வந்த போலீசாரின் இருசக்கர வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் திருடு போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே பிள்ளைபாக்கம் சிப்காட்டில் உள்ளதனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருபவர்கள் கன்னியாகுமரியை சேர்ந்த ஜான் வயது 23 மற்றும் வேலூரைச் சேர்ந்த தினேஷ் வயது 24. இவர்கள் இருவரும் நாவலூர் பகுதியில் தாங்கள் வேலை செய்யும் தொழிற்சாலை ஊழியர்களோடு தங்கி வேலை செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் நைட் ஷிப்ட் .
ஆகவே இன்று காலை அதே நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை செய்யும் காளிதாஸ் என்பவருடைய இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுவிட்டு தாம்பரம் சாலையில் ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்த பொழுது மாங்கான்யம் அருகில் புளிய மரத்தில் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் தலையில் பலத்த காயங்களோடு சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து தகவலறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த 2 வாலிபர்கள் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் வேலை செய்த தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலராக பணி புரியும் அருள் என்பவர் அவ்வழியாக சென்று கொண்டிருந்த பொழுது இந்த விபத்தை பார்த்து தனது இருசக்கர வாகனத்தை விட்டு இறங்கி 2 போட்டோ எடுப்பதற்குள் அவருடைய இருசக்கர வாகனம் திருடு போனது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் காவலர் அருள் என்ன செய்வது என்று அறியாது திகைத்து நின்றது அங்கு கூடியிருந்த மக்களிடத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியது.