BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

உக்ரேனில் கார்கிவ்-வில் சிக்கித் தவிக்கும் மாணவர்களை மீட்க உடனடியாக மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை.

உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள நேஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இதில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் ஐ சேர்ந்த மாணவர் கிப்சன் ஜோசப் செல்வராஜ் என்பவர் இன்ஜினியரிங் நான்காம் ஆண்டு படித்து வருகிறார்.


இந்தநிலையில் உக்ரைன் ரஷ்யா இடையான போர் நடந்து வரும் சூழலில்,
அங்கிருந்து அவர் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.
அதில் 137 மாணவர்கள் தங்கியிருக்கக் கூடிய இடத்தில் எவ்வித உணவு கிடைக்காததால் உணவு வாங்க வெளியே சென்ற போது குண்டு வெடிப்பு நடத்தப்பட்டதால் தொடர்ந்து அருகில் உள்ள பல்கலைக்கழகத்தில் தஞ்சம் அடைந்ததாகவும், பின்னர் பங்கேர்ஸ் எனப்படும் 60அடி பள்ளமான பகுதியில் தஞ்சமடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது கையில் போதுமான உணவுகள் இல்லை என்றும், தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உக்ரேன் தலைநகரான கிவ் நகரில் உள்ள மாணவர்களை மட்டுமே மீட்க முயற்சி நடைபெற்று வருவதாகவும், கார்கிவ் பகுதியில் உள்ள மாணவர்களையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வீடியோ பதிவு மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கார்க்கி பகுதியானது ரஷ்ய எல்லையில் மிக அருகில் அமைந்துள்ள பகுதி ஆகும்.
தொடர்ந்து இந்த பகுதியில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டு வருவதாக மாணவர்கள் பதட்டத்துடனும், உறக்கமின்றி இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும்
தூதரகத்தை சேர்ந்தவர்கள் கிவ் பகுதிக்கு வருமாறு அழைப்பு விடுக்கின்றனர், ஆனால் கார்கிவ் பகுதியில் இருந்து கிவ் நகருக்கு வருவதற்கு 20 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய சூழல் உள்ளதாகவும், போர் நடந்து வரும் வேலையில் கிவ் நகருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து திருச்சி மாணவனின் பெற்றோர் செல்வராஜ் கூறுகையில்,
அனைவருடைய பார்வையும் கிவ் நகரை நோக்கியே உள்ளதாகவும் அங்கு உள்ள பகுதியில் உள்ள மாணவர்களை மட்டுமே மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றனர்.
ஆனால் கார்கிவ் பகுதியில் ஏராளமான மாணவர்கள் இன்ஜினியரிங் மருத்துவம் பயின்று வருகின்றனர்.

போர் நடந்து வரும் வேளையில் மாணவர்கள் அச்சத்துடனே இருப்பதால் அவர்களை மீட்க எங்ககெல்லாம் மாணவர்கள் தங்கி இருப்பார்கள் என்பதை கண்டறிந்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் மத்திய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

Share this…

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )