தலைப்பு செய்திகள்
ரூ.139 கோடி மாட்டுத் தீவன ஊழல் – லாலு குற்றவாளி எனத் தீர்ப்பு.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பிகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிகார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு எதிரான மாட்டுத் தீவன ஊழல் வழக்கு ராஞ்சி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பின் தண்டனை விவரத்தை நீதிமன்றம் பிப்ரவரி 18ஆம் தேதி வெளியிடவுள்ளது. தோரந்தா கருவூலத்தில் ரூ.139 மதிப்பிலான தீவன ஊழல் செய்ததாக லாலு மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.லாலு பிரசாத் தண்டனை பெறும் ஐந்தாவது தீவன ஊழல் வழக்கு இதுவாகும். இதுவரை, நான்கு வழக்குகளில் சிறை தண்டனை பெற்றுள்ள லாலு, தற்போது பிணையில் உள்ளார்.