BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

கட்டட கழிவுகள்,பழைய பெயர்தெடுக்கப்பட்ட சாலை கழிவுகளை குப்பைபோல் கொட்டி தஞ்சையில் சர்வதேச விளையாட்டு மைதானம்.

கட்டட கழிவுகள்,பழைய பெயர்தெடுக்கப்பட்ட சாலை கழிவுகளை குப்பைபோல் கொட்டி தஞ்சையில் சர்வதேச விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருவதாக விளையாட்டு வீரர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் சர்வதேச அளவில் தடகள விளையாட்டு மைதானமும் அதன் நடுவில் சர்வதேச அளவிலான கால்பந்து மைதானம் அமைக்கப்பட்டு வருகின்றது.

 

இந்த மைதானங்கள் முறைப்படி சர்வதேச தரத்தில் அமைக்கப்படாததால் பல்வேறு கோரிக்கைகளுக்கு பின்னர் மீண்டும் இந்த மைதானங்கள் அமைக்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தடகள மைதானங்கள் அமைப்பதற்கு முன்னதாக கால்பந்து மைதானம் அமைக்கவேண்டும் என்ற காரணத்தினால் அரைகுறையாக முறையில்லாமல் தண்ணீர் தெளிக்கும் வசதியில்லாமல் கால்பந்து மைதானத்தில் கற்களும் உடைந்த கட்டட கழிவுகளும் மற்றும் உடைத்து அகற்றப்பட்ட சாலைகளும் கொண்டு வந்து கொட்டி மைதானத்தை அமைக்கும் வேலைகளை செய்து வருகின்றனர்.

சர்வதேச தரத்தில் இருக்க வேண்டிய கால்பந்து மைதானத்திற்கு என அமைக்கும் வரைமுறைகள் எதுவும் பின்பற்றப்படாமல் ஒரு குப்பை கொட்டும் இடம் போல் கழிவுகளைக் கொண்டு ஆடுகளம் அமைத்தால் அது எந்த வகையிலும் யாருக்கும் பயன்படாமல் ஆகிவிடும் அதுமட்டுமல்லாமல் ஏராளமான பொருட் செலவில் அமைக்கப்படும் இந்த மைதானத்திற்கு தரமில்லாத பொருட்களை கொண்டு மைதானம் அமைப்பது எந்த வகையிலும் சரி இல்லாதது ஆகையினால் இந்த செய்தியினை தங்களுடைய பத்திரிக்கையில் வரச்செய்து விளையாட்டு மைதானத்தை முறைப்படி அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )