தலைப்பு செய்திகள்
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ரவிச்சந்திரனுக்கு பரோல் நீட்டிப்பு 3-வது முறையாக ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள ரவிச்சந்திரனுக்கு 3-வது முறையாக மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ரவிச்சந்திரனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17-ஆம் தேதி தமிழக அரசு 30 நாள் விடுப்பு வழங்கியது.
இதனைத்தொடர்ந்து தனது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்பநாயக்கன் பட்டியில் தங்கி உள்ளார்.
இதையடுத்து இன்றுடன் பரோல் முடிந்து நாளைக்கு சிறைக்கு செல்ல வேண்டிய நிலையில் 3 வது முறையாக நாளை முதல் அடுத்த மாதம் 16 ஆம் தேதி வரை பரோல் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
CATEGORIES Uncategorized