BREAKING NEWS

தலைப்பு செய்திகள்

மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்: அன்புமணி ராமதாஸ்.

தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை, நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும் என பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர்கள் படகு மற்றும் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதற்கு கண்டனத்திற்குரியது ஆகும்.

பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதை தவிர்க்கும் படி பலமுறை கேட்டுக்கொண்ட பிறகும், தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவது நாட்டின் இறையாண்மை மீது நடத்தப்படும் தாக்குதலாக பார்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் உட்பட இலங்கை சிறைகளில் வாடும் 59 தமிழ்நாடு மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யவும், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

CATEGORIES

COMMENTS

Wordpress (0)
Disqus ( )